புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

News image

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு - PTI

Updated On :25 ஏப்ரல் 2026, 4:57 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) அன்று நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது .

அதேபோல ஏப். 23 அன்று நடந்த மேற்குவங்க முதல் கட்டத் தேர்தலிலும் 44,376 வாக்குச்சாவடிகளில் எதிலும் மறு வாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதுள்ளதை இது காட்டுகிறது.

Summary

No repoll has been recommended in any of the 75,064 polling stations across Tamil Nadu: EC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.