அஸ்ஸாம் தேர்தலில் மக்கள் ஆர்வம்: மாற்றத்தின் பின்னணி என்ன?

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் வழக்கத்தை விட அதிகமான குடிமக்கள் முன் வந்து வாக்களித்துள்ளனர்.
Updated on
1 min read

குவகாத்தி : அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் வழக்கத்தை விட அதிகமான குடிமக்கள் முன் வந்து வாக்களித்துள்ளனர்.

பொதுவாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல்கள் மந்தகதியில் நடக்கும். ஆனால் இந்த முறை, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததில், முதல் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்ற இளைஞர், இளைஞிகளும், பெண்களும் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தியதே.

நாட்டின் முன்னேற்றத்தில் நாங்கள் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். அதன் முதல் படியாக, இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று ஒரு இளைஞர் கூறினார்.

பெண்களும், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை ஆர்வத்தோடு செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com