பயங்கரவாதிகள் ஊடுருவல்? ஒடிசாவில் உச்சகட்ட பாதுகாப்பு

பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக தில்லி காவல் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து ஒடிசாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புவனேஸ்வர் : பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக தில்லி காவல் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து ஒடிசாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒடிசா மாநில காவல் துறை டிஜிபி பி.கே. சிங்  செய்தியாளரிடம் கூறியதாவது:

பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தவர் ஒருவருடன் காரில் ஊடுருவியதாகவும், பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் ஊடுருவி இருப்பதால்க புலனாய்வுத் துறையும், பாதுகாப்புப் படையினரும் எச்சரிக்கை விடுத்திருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாகன சோதனை, காவல் துறை கட்டடங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் உள்ள வளாகங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீஸார் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கியமாக விமான நிலையம், ஹிராகுத் அணை, வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com