அஜ்மீர் தர்காவில் சமர்ப்பிக்க போர்வை வழங்கினார் மோடி

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தின் மீது அணிவிக்க மலர்ப்போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் அளித்தார்.
Updated on
1 min read

புது தில்லி : ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தின் மீது அணிவிக்க மலர்ப்போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் அளித்தார்.

இஸ்லாமிய மார்கத்தின் சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 804வது உருஸ் கொண்டாட்டங்கள் ராஜஸ்தானில் துவங்கி நடைபெற்று வருகிறது.

அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவிப்பது இஸ்லாமியர்கள் வழக்கம்.

அதன்படி, காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் அணிவிக்க, மலர்ப்போர்வையை மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் வழங்கினார்.

இதனை, முக்தார் அப்பாஸ் நக்வி நாளை அஜ்மீர் சென்று சமர்ப்பிக்க உள்ளார். அப்போது, அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com