புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை

உக்ரைன் நாட்டில், கீவ் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் மருத்துவ கல்லூரியில்

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 9:23 am

புது தில்லி: உக்ரைன் நாட்டில், கீவ் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் மருத்துவ கல்லூரியில் நேற்று மூன்று மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் முசாபர் நகரை சேர்ந்த பிரனாவ் ஷைன்டில்யா, காசிபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அன்குர் சிங் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அக்ராவைச் சேர்ந்த இந்திரஜீத் சிங் சவுகான் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை கீவ் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தில்லியில் உள்ள வெளியூறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.