மும்பையில் தோசை வார்த்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

இந்தியாவில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், தனியார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான தோசை சுடும் இயந்திரத்தில் தோசை வார்த்ததோடு, அதை ருசியும் பார்த்தார்.
மும்பையில் தோசை வார்த்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம்
Updated on
1 min read

மும்பை: இந்தியாவில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், தனியார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான தோசை சுடும் இயந்திரத்தில் தோசை சுட்டதோடு, அதை ருசியும் பார்த்தார்.

பிரிட்டன் இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேத் மிடில்டனும் நேற்று மும்பை வந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த விகாஸ் என்பவர் தோசை சுடும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த இயந்திரத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இங்கிலாந்து வில்லியம் தம்பதியினர், அந்த புதிய தோசை சுடும் இயந்திரத்தில் தோசை வார்த்தனர்.

வில்லியம் மாவை எடுத்து ஊற்ற, கேத் மிடில்டன் அதிக உற்சாகத்துடன் அந்த இயந்திரம் வேலை செய்யும் முறைகளைக் கேட்டறிந்தார்.

பாதுகாப்புக் காரணங்களால் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பெரும்பாலும் வெளி இடங்களில் சாப்பிடுவதில்லை. ஆனாலும், வில்லியம் தான் சுட்ட தோசையை சிறிது ருசிப் பார்த்தார். ''நமஸ்தே மும்பை, தோசை சுடும் அனுபவத்தை பெற்றதற்கு நன்றி''  என்று உற்சாகமாக கூறினார் வில்லியம்.

இந்த தோசை சுடும் இயந்திரம் குறித்து அதன் தயாரிப்பாளர் விகாஸ் கூறுகையில், தோசை சுடும் பெரிய அளவிலான இயந்திரங்கள் பெரிய ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று இளவரசர் வில்லியம் பயன்படுத்திய தோசை சுடும் இயந்திரம் சிறிய அளவில் வீடுகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அதிக அளவில் தயாரிப்பதற்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

இந்த சிறிய தோசை சுடும் இயந்திரம் விரைவில் விற்பனைக்கு வருகிறது. அதன் விலை ரூ. 12,500 வரை இருக்கும் என விகாஸ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com