ரூபாய் நோட்டு வாபசுக்கு பிறகான முதல் சம்பள நாள்: எப்படி இருக்கு?

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிறகான முதல் சம்பள நாளான வியாழனன்று, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் காலையிலிருந்தே பொதுமக்கள் குவிந்திருக்கும் காட்சிகளை  காண முடிகிறது.
ரூபாய் நோட்டு வாபசுக்கு பிறகான முதல் சம்பள நாள்: எப்படி இருக்கு?

கொல்கத்தா: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிறகான முதல் சம்பள நாளான வியாழனன்று, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் காலையிலிருந்தே பொதுமக்கள் குவிந்திருக்கும் காட்சிகளை  காண முடிகிறது.

தகவல் தொழில் நுட்பத் துறையில்பணியாற்றும் இளைஞர்களில் தொடங்கி ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் வரை என பல தரப்பினரும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர்.

பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்து 23 நாட்கள் ஆன பின்னரும்,  வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்கள் மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தையே அளித்து வருகின்றன. 

கொல்கத்தா நகரில் பெரும்பான்மையான ஏ.டி.எம்களில் 'பணம் இல்லை என்னும் அறிவிப்பு தொங்க விடபட்டுள்ளது. அதே நேரம் திறந்திருக்கும் ஒன்றிரண்டு ஏ.டி.எம்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள்  மட்டுமே கிடைப்பதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

கொல்கத்தா நகரின் தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் நிறைந்திருக்கும் பகுதியான சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள ஏ.டி.எம் ஒன்றின் வாசலில் கா த்திருந்த இளைஞர் ஒருவர் கூறும் பொழுது, 'வங்கியில் எனக்கு சம்பளம் போட்டு விட்டார்கள். ஆனால் கையில் பணம் இல்லை. இன்று பணம் கிடைக்க ஏதாவது அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று பார்க்கலாம்' என்றார்.

அதேபோல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றின் முன்னால் உள்ள வரிசையில் காலை 07.30 மணியில் இருந்து நின்று கொண்டிருந்த ஒருவர் கூறும் பொழுது, 'ஏ.டி.எம்களில்  பணம் எடுப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள்  உள்ளது. எனது குடும்பம் பெரியது. அதன் தேவைகளை சமாளிப்பதற்கு அதிகப் பணம் தேவை என்பதால் இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதே போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பணம் எடுப்பதற்காக பெருமளவில் மக்கள் குவிந்தனர். ஆனால் ரூபாய் 4000 முதல் 6000 வரையே அவபர்களால் பணம் எடுக்க முடிந்தது. நிறைய  பேருக்கு அதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு மாநிலங்களிலும் இன்னும் வங்கிகளில் ரூபாய் 500 நோட்டுக்கள் கிடைக்கவில்லை என்பதும் பிரச்சினையை சிக்கலாக்கி இருக்கிறது.  

ஹைதராபத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தனியார் நிறுவன ஊழியர் ஈஸ்வர் ராவ், 'வங்கிகளில் அனுமதிக்கப்படும் மிகக்குறைந்த அளவு தொகையை வைத்துக் கொண்டு எனது வீட்டின்பல்வேறு செலவுகளை எப்படி சமாளிப்பது? என்று கேகள்வி எழுப்பினார்.

மேலும் மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, அவர்களுக்கு ரூ.10000 வரை பணம் வழங்குமாறு இரண்டு மாநில அரசுக்களும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சம்பள நாளின் அழுத்தத்தை சமாளிக்க இயலாமல் இரு மாநிலங்களிலும் வங்கிகள் சிரமப்படுகின்றன என்பது மட்டும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com