புது தில்லி: ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான புதிய முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நடத்துவதில் தற்போது பேடிஎம் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவகாரத்திற்கு பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணைய இணைப்பும், ஸ்மார்ட்போனும் இருப்பவர்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்ற நிலை உள்ளதால், நாடு முழுவதும் பெரும்பான்மையாக இருக்கின்ற இதர மக்கள் இந்த வசதியைப் பெற முடியாத நிலைமை இருந்தது. இதனைப்போக்க தற்போது பேடிஎம் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த இணைய இணைப்போ , ஸ்மார்ட்போனோ இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம். இதற்கென 180018001234 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதற்கு என நடைமுறைகளும் வெயிடப்பட்டுள்ளது.
அதன்படி இதனைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களோ, வியாபாரிகளோ முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தங்களது அலைபேசி எண்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களுக்கு என ஒரு நான்கு இலக்க ரகசிய எண்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் யாருக்கு பணத்தை செலுத்த வேண்டுமோ அவர்களது அலைபேசி எண்னை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையையம் உள்ளிட வேண்டும். அதன் பின்னர் பரிவர்த்தனையை உறுதி செய்ய தங்களது ரகசிய எண்னை பதிவிட வேண்டும். இதன் முறையின் மூலம் அவர்களும் பணத்தை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய இயலும்.
இவ்வாறு பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் நிதின் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


