யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஒரே வருடத்தில் 3135 'உபேர் ' பயணங்கள்: பெங்களூரு வாலிபரின் 'அடடே'  சாதனை!

பெங்களூருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 3135 'உபேர்' கால் டாக்சி பயணங்களை மேற்கொண்டு, உலகிலேயே ஓராண்டில் அதிக பயணங்களை மேற்கொண்ட தனி நபர் என்ற சாதனைக்கு. ..

News image
Updated On :15 டிசம்பர் 2016, 9:20 am

புதுதில்லி: பெங்களூருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 3135 'உபேர்' கால் டாக்சி பயணங்களை மேற்கொண்டு, உலகிலேயே ஓராண்டில் அதிக பயணங்களை மேற்கொண்ட தனி நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

உலக அளவில் பிரபலமான மொபைல் அப்பளிக்கேஷன் வழி கால்டாக்சி சேவை நிறுவங்களில் உபேர் முன்னணியில் உள்ளது. தற்பொழுது இந்தியாவிலும் இந்த நிறுவனம் வலுவாக காலூன்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்கு ஆசிய பிரிவின் தலைவர் அமித் ஜெயின் இன்றி தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசினார்.  அப்பொழுது அவர் கூறியதாவது:   

உங்களது நகரத்தை சுற்றிப்பார்க்க விரும்பினால் அதற்கு உங்களுக்கு உதவுவதில் தற்போது உபேர்தான் முன்னணித் தேர்வாக உள்ளது.  பெங்களூரூவைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 3135 உபேர் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதாவது சராசரியாக ஒருநாளைக்கு அவர் எட்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் உலகிலேயே ஓராண்டில் அதிக உபேர் பயணங்களை மேற்கொண்ட தனி நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.