புதுதில்லி: சர்ச்சைகளில் இருந்து விடுபடுவதற்கு கல்வி சான்றிதழ்களை பகிரங்கமாக வெளியிடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விட்டுள்ளார்.
தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவிவருகிறது.முதலில் அவர் தான் கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறினார். பின்னர் அவர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழங்களில் அஞ்சல் வழியில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டினார். ஆனால் அவையும் போலி என்று குற்றசாட்டு எழுந்தது.
ஒருவேளை அவருடைய கல்விச்சான்றிதழ்கள் உண்மையானதுதான் என்றால் அவற்றை வெளியிட அவர் தயங்குவது ஏன்? ஏன் அவற்றை மறைக்கிறார் என்று கெஜ்ரிவால்கேள்வி எழுப்பினார். மேலும் மோடியுடைய தயக்கமே சந்தேகத்தை கிளப்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மோடியின் கல்விச் சான்றிதழ்கள் குறித்த விபரங்களை தரக் கோரி மத்திய தகவல் ஆணையத்தை கெஜ்ரிவால் அணுகினார். அப்பொழுது மோடியின் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தொடர்பான தகவல்களை கேஜ்ரிவாலுக்குஅளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசில் புரட்சி நடக்கும்; 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு

பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை... சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு காரணமா?

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


