சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்க சிறப்பு பரிசுத் திட்டங்கள் அறிமுகம்!

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு சிறப்பு பரிசுத் திட்டங்களை 'நிதி ஆயோக்' அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:55 pm

புதுதில்லி: நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு சிறப்பு பரிசுத் திட்டங்களை 'நிதி ஆயோக்' அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள 'நிதி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் கந்த் இன்று தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு சிறப்பு பரிசுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லக்கி க்ரஹக் யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு திட்டமானது ரூ.50 தொடங்கி ரூ.3000 வரையிலான  டிஜிட்டல் பணப்பரிவர்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி மற்றும் வார அளவில்நடத்தப்பட உள்ள குலுக்கலில் இருந்து தேர்தெடுக்கப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதேபோல் டிஜி தன் யோஜனா என்ற திட்டமானது வியாபாரிகளுக்காக ஊக்கத்தொகைகளை  வழங்குகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.50000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.   

இந்த இரண்டு திட்டங்களும் வரும் கிருஸ்துமஸ் தினம் முதல் செயல்படத் துவங்கும். அதேபோல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கும். அன்று நடைபெறும் நிறைவு விழாவில் வடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிங்கள் இரு தரப்பினருக்கும் அதிக அளவிலான மதிப்பு கொண்ட மெகா பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமிதாப் கந்த் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.