புதுதில்லி: இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வருமான வரிச் சட்டப் பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
வருமான வரிச் சட்டப் பிரிவில் இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் ஷரத்து உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது நிலவும் சூழலை பயன்படுத்தி, இருபதாயிரம் வரையிலான நிறைய டெபாசிட்டுகளை அரசியல் கட்சிகள் செய்து விடலாம்.
அதேபோல் அவ்வாறு டெபாசிட் செய்து வைக்கப்பட்டுள்ள பணத்தை அவர்கள் கணக்க்கிலிருந்து எடுத்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.எனவே இந்த வழக்கை அவசர வழக்காக கருதி ஜனவரி 3-ஆம் தேதி விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுஇருந்தார். இந்த மனுவானது விடுமுறைக்கால நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஷர்மாவிடம், ' 1961-ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி சட்டத்தில் இந்த பிரிவு இருந்து வரும் நிலையில், தற்போது டெபாசிட்டுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


