எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல்  கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வருமான வரிச் சட்டப்  பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை...

News image
Updated On :23 டிசம்பர் 2016, 7:47 am

புதுதில்லி: இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல்  கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வருமான வரிச் சட்டப்  பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.  

தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

வருமான வரிச் சட்டப்  பிரிவில் இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல்  கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் ஷரத்து உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது நிலவும் சூழலை பயன்படுத்தி, இருபதாயிரம் வரையிலான நிறைய டெபாசிட்டுகளை அரசியல் கட்சிகள் செய்து விடலாம்.  

அதேபோல் அவ்வாறு டெபாசிட் செய்து வைக்கப்பட்டுள்ள பணத்தை அவர்கள் கணக்க்கிலிருந்து எடுத்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.எனவே இந்த வழக்கை அவசர வழக்காக கருதி ஜனவரி 3-ஆம் தேதி விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுஇருந்தார். இந்த மனுவானது விடுமுறைக்கால நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஷர்மாவிடம், ' 1961-ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி சட்டத்தில் இந்த பிரிவு இருந்து வரும் நிலையில், தற்போது டெபாசிட்டுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.