டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வந்தாச்சு 'ஆதார் பேமெண்ட் ஆப்'!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்கவிக்கும் பொருட்டு 'ஆதார் பேமெண்ட் ஆப் ' எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:38 am

DIN

புதுதில்லி: இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்கவிக்கும் பொருட்டு 'ஆதார் பேமெண்ட் ஆப் ' எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி அறிவித்துள்ள பண மதிப்புநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது 'ஆதார் பேமெண்ட் ஆப் ' எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.       இந்த செயலி நடைமுறைப்படுத்தப்பபடுமானால் மாஸ்டர் கார்டு, விசா போன்ற தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் சேவை கட்டணங்களை நீக்கும் வாய்ப்பு உருண்டாகும்.

இதை பயன்படுத்த விரும்பும் வியாபாரிகள் ஆதார் பேமெண்ட் செயலியை தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனினை பயோமெட்ரிக் ரீடருடன் இணைக்க வேண்டும். இந்த பயோமெட்ரிக் ரீடர் சந்தையில் 2000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. வாடிக்கையாளரகள் பணம் செலுத்த, தங்களின் ஆதார் எண் மட்டும் பயன்படுத்தி, பணம் செலுத்தப்பட வேண்டிய வங்கியை தேர்வு செய்ய வேண்டும். இங்கு பயோமெட்ரிக் ஸ்கேன் பண பரிமாற்றத்தில் பாஸ்வேர்டு போன்று செயல்படுகிறது. 

ஆதார் எண் பதிவு செய்ததும், இந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் தானாக தேர்வு செய்யப்படும், இனி வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வங்கியை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தலாம். எவ்வித பரிமாற்றத்திற்கும் வாடிக்கையாளர்கள் மற்ற செயலி அல்லது பாஸ்வேர்டையோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைத்திருந்த வாடிக்கையாளர்கள் ஆதார் பேமெண்ட் செயலியின் சேவையை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 40 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்களை மார்ச் 2017க்குள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.