டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வந்தாச்சு 'ஆதார் பேமெண்ட் ஆப்'!
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்கவிக்கும் பொருட்டு 'ஆதார் பேமெண்ட் ஆப் ' எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.


புதுதில்லி: இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்கவிக்கும் பொருட்டு 'ஆதார் பேமெண்ட் ஆப் ' எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள பண மதிப்புநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது 'ஆதார் பேமெண்ட் ஆப் ' எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த செயலி நடைமுறைப்படுத்தப்பபடுமானால் மாஸ்டர் கார்டு, விசா போன்ற தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் சேவை கட்டணங்களை நீக்கும் வாய்ப்பு உருண்டாகும்.
இதை பயன்படுத்த விரும்பும் வியாபாரிகள் ஆதார் பேமெண்ட் செயலியை தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனினை பயோமெட்ரிக் ரீடருடன் இணைக்க வேண்டும். இந்த பயோமெட்ரிக் ரீடர் சந்தையில் 2000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. வாடிக்கையாளரகள் பணம் செலுத்த, தங்களின் ஆதார் எண் மட்டும் பயன்படுத்தி, பணம் செலுத்தப்பட வேண்டிய வங்கியை தேர்வு செய்ய வேண்டும். இங்கு பயோமெட்ரிக் ஸ்கேன் பண பரிமாற்றத்தில் பாஸ்வேர்டு போன்று செயல்படுகிறது.
ஆதார் எண் பதிவு செய்ததும், இந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் தானாக தேர்வு செய்யப்படும், இனி வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வங்கியை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தலாம். எவ்வித பரிமாற்றத்திற்கும் வாடிக்கையாளர்கள் மற்ற செயலி அல்லது பாஸ்வேர்டையோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைத்திருந்த வாடிக்கையாளர்கள் ஆதார் பேமெண்ட் செயலியின் சேவையை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 40 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்களை மார்ச் 2017க்குள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...