பணமழையில் வருமான வரித்துறை: கணக்கில் வராத பணம் எவ்வளவு தெரியுமா?

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ.4,172 கோடி மதிப்பிலான சொத்துகள், ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
பணமழையில் வருமான வரித்துறை: கணக்கில் வராத பணம் எவ்வளவு தெரியுமா?


புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ.4,172 கோடி மதிப்பிலான சொத்துகள், ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

சாதாரண, ஏழை, எளிய மக்கள் வெறும் 2,500க்கு நாள் முழுக்க வரிசையில் நிற்கும் நிலையில் ரூ.105 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தான் பொது மக்களுக்கு மட்டும் அல்ல வருமான வரித்துறையினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. கருப்பு பண ஒழிப்பில் முக்கிய நடவடிக்கையாக இதனை மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறையினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 28-ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனைகளில் இதுவரை ரூ.4,172 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள், ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் உள்ளிட்ட நகைகள், ரொக்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.549 கோடியாகும்.

இதில் புதிதாக வெளியிடபட்டுள்ள ரூ.500, ரூ.2000 நோட்டுகளாக ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 477 வழக்குகளை சிபிஐ, அமலாக்கத் துறைக்கு வருமான வரித் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com