சமாஜ்வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவை நீக்கும் முடிவு ரத்து! 

சமாஜ்வாதி கட்சியில் இருந்து மாநில முதல்வரான அகிலேஷ் யாதவை நீக்கும் முடிவு ரத்து செய்யப்படுவதாக அக்கட்சித் தலைமை 'திடீர்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவை நீக்கும் முடிவு ரத்து! 

லக்னோ: சமாஜ்வாதி கட்சியில் இருந்து மாநில முதல்வரான அகிலேஷ் யாதவை நீக்கும் முடிவு ரத்து செய்யப்படுவதாக அக்கட்சித் தலைமை 'திடீர்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி  கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட போட்டி தனிபட்டியல்  ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது.

இந்நிலையில் கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவ் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டதால். ஒழுங்கு நடவடிக்கையாக அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்கோபால் யாதவ் ஆகிய இரண்டு பேரும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்தார்.

கட்சியில் பெரும் பரப்பரப்பைக் கிளப்பிய இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அகிலேஷ் தனிக்கட்சி தொடங்க ப் போவதாக யூகங்கள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் மகன் இடையே சமாதான நடவடிக்கையை மூத்த கட்சித் தலைவரும் அமைச்சருமான ஆஸம்கான் மேற்கொண்டார். முலாயமின் இல்லத்தில் சமாதான நடவடிக்கை பேச்சு வார்த்தை நடைபெற்றது.  

அதன் முடிவாக முலாயமின் ஆலோசனையின் பேரில் அகிலேஷ் மற்றும் ராம்கோவபால் யாதவ் ஆகிய இருவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் மூத்த தலைவரான ஷிவ்பால் சிங் யாதவ் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com