தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை காலை வாபஸ் பெறப்பட்டது.

Updated On :8 பிப்ரவரி 2016, 6:44 am

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை காலை வாபஸ் பெறப்பட்டது.

இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு, ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவும், நிலுவைத் தொகையை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டதன் அடிப்படையில், தில்லி துப்புரவுத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

மேலும், துப்புரவு தொழிலாளர்களின் கூட்டு இயக்கமானது, வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு, பணியைத் துவக்குவதாக நீதிபதிகளிடம் உறுதி அளித்துள்ளது.

நிலுவை ஊதியத்தை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் கடந்த கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக, மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.