பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தீவிரவாதிகளுடனான சண்டை: வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை, மிகுந்த பயற்சி பெற்ற தீவிரவாதிகளுடனான சண்டையின் போது வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஷங்கர் சந்திரபான் ஷிண்டே உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Updated On :15 பிப்ரவரி 2016, 9:00 am

காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை, மிகுந்த பயற்சி பெற்ற தீவிரவாதிகளுடனான சண்டையின் போது வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த  ராணுவ வீரர் ஷங்கர் சந்திரபான் ஷிண்டே உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மகாராஷ்டிர மாநிலம் நாஷிக்கில் உள்ள பாயல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஷங்கர் சந்திரபான் ஷிண்டேவின் இறுதிச் சடங்குகள் இன்று முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஸுன்ரேஷி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் சந்திரபாணியுடன் சேர்த்து இரண்டு வீரர்கள் பலியாகினர்.

வீர மரணம் அடைந்த ஷிண்டே கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், ஆறரை வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.

இவர், கடந்த 2012ம் ஆண்டு தெற்கு சூடானில் நடைபெற்ற அமைதிக் காப்புக் குழுவில் இந்திய தரப்பில் சென்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.