கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல்:மூன்றில் 2 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக

கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் காங்கிரஸ் ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான பாஜக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Updated on
1 min read

கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான பாஜக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஹெப்பாள், பீதர் மாவட்டத்தில் உள்ள பீதர், ராய்ச்சூரு மாவட்டத்தில் உள்ள தேவதுர்கா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்.13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்று தொகுதிகளிலும் 55 சதவீத வாக்குகள் பதிவாயின.

மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது.

பெங்களூருவில் உள்ள ஹெப்பாள் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தேவதுர்கா தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியுள்ள பாஜக, பீதர் தொகுதியில் காங்கிரஸிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.

3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மட்டுமே சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்திருக்காது என்ற நிலையில், ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியிருப்பது, சித்தராமையாவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை இடைத்தேர்தலில் இருந்தே தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com