பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜாமீன் கோரி கன்னையாகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனு

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2016, 11:34 am

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தை தாக்கியதாக கூறி தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினத்தையொட்டி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கன்னையா குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள்  சோலி சொரப்ஜி, ராஜு ராமச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனினும், வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஜெ.செல்மேஷ்வர், ஏ.எம்.சப்ரே கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.