முக்கியமான பிரச்னைகள் குடியரசுத் தலைவர் உரையில் இல்லை: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து ஏதும் கூறப்படவில்லை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து  ஏதும் கூறப்படவில்லை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கெனவே தெரிவித்த விஷயங்களையே மீண்டும் கூறியுள்ளார். விலைவாசி உயர்வு குறித்தோ அண்டை நாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியோ குடியரசுத் தலைவர் பேசவில்லை. ஜேஎன்யு விவகாரம், ஜாட் போராட்டம் போன்றவற்றால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் அவை தொடர்பான எந்த விஷயங்களும் பிரணாப் முகர்ஜியின் உரையில் இடம்பெறவில்லை.

இது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. "தூய்மை இந்தியா' திட்டத்தின் பிரசாரத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கேட்டு வருகிறோம். "தூய்மை இந்தியா' திட்டத்துக்காக கூடுதல் வரியும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையைக் கொண்டு அந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை என்றார் ராஜீவ் சுக்லா.

மார்க்சிஸ்ட் தாக்கு: குடியரசுத் தலைவர் உரை குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் மிக நீண்டதொரு உரையை குடியரசுத் தலைவர் வாசித்துள்ளார். ஆனால், அதில் ஜாட் போராட்டம், ஜேஎன்யு விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் இடம்பெறவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com