இந்தியாவுக்கு எதிராக முழக்கமிடுபவர்களை பொறுத்துக் கொள்ள வேண்டுமா என்பது குறித்து ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசர் ஷாராவஸ்தி சிலை திறப்பு விழா இன்று தில்லியில் நடைபெற்றது. சிலையை திறந்து வைத்து பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
இந்தியாவுக்கு எதிராக முழக்கமிடுவோரை சுதந்திரமான பேச்சுரிமையின் அடிப்படையில் பொறுத்துக் கொள்ள வேண்டுமா என நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. அப்சல் குருவுக்கு ஆதரவாக முழக்கமிட்டோர் துரோகிகளா இல்லையா என்பதை காங்கிரஸ் கட்சியும் அதன் தொண்டர்களும் விளக்கம் வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக முழக்கம் என்பது சுதந்திரமான பேச்சா அல்லது தேச துரோகமா என்பதை நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து கட்சியினரும் விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக முழக்கமிடுவோரை ராகுல் ஆதரிக்காவிடில், ஏன் அவர்களை கண்டிக்கவில்லை. பல்வேறு தியாகிகளின் தியாகம் காரணமாகவே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால், சுதந்திரமான பேச்சு என்ற போர்வையில் நாட்டை துண்டாடுபவர்களுக்கு ராகுல் உதவி வருகிறார் என்றார் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

விமானப்படை விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கட்டுப்பாடு

தோ்தல் பணியில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொகுதிகளுக்கு 22 முதல் 26 சுற்றுகளில் முடிவுகள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

