மானிய சிலிண்டர்களை 10 ஆக குறைப்பதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை

இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகளை ஆண்டுக்கு பத்தாக குறைப்பதற்கு பரிந்துரை
மானிய சிலிண்டர்களை 10 ஆக குறைப்பதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகளை ஆண்டுக்கு பத்தாக குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அரசு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ஒரு வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் மானிய விலையில் 12 எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நிகழ் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 6.19 கோடி வாடிக்கையாளர்கள் எரிவாயு உருளை மானியம் பெற்று வருகின்றனர்.  அவர்களுக்கு உருளை ஒன்றுக்கு ரூ. 238 மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மானிய எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 12லிருந்து 10 ஆக குறைப்பதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மானிய எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 ஆகக் குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததையடுத்து, அடுத்த ஜனவரி மாதம் 9 ஆக உயர்த்தப்பட்டது. ஆட்சி முடியும் தருவாயில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மானிய எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 29) ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், மானிய எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே மாதம் இறுதிக்குள் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக இந்த நடவடிக்கையை எடுக்குமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது. ஏனெனில், இந்த 5 மாநிலங்களிலும் பாஜக அல்லாத அரசுகளே நடைபெற்று வருகின்றன. ஆட்சியை பிடிக்கவும், கனிசமான இடங்களை பெறவும் பாஜகவினர் ஆயத்தமாகி வரும் நிலையில், மானிய எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்றே நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com