பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிச்சை எடுப்பது குற்றமல்ல: மத்திய அரசின் வரைவு மசோதாவில் தகவல்

மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் `வறுமையில் உள்ளவர்கள் பாதுகாப்புச் சட்ட'த்தில் பிச்சை எடுப்பது குற்றம் என்பது நீக்கப்படுகிறது.

News image
Updated On :28 பிப்ரவரி 2016, 7:27 am

மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் `வறுமையில் உள்ளவர்கள் பாதுகாப்புச் சட்ட'த்தில் பிச்சை எடுப்பது குற்றம் என்பது நீக்கப்படுகிறது.

மத்திய அரசு `வறுமை நிலையில் உள்ளவர்கள் (பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்டம், 2015'  என்ற புதிய சட்டத்துக்கான வரைவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் வறுமை நிலையில் இருப்பவர்கள் என்பதின் கீழ் வறுமையில் உள்ளவர்கள், கைவிடப்பட்டவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தங்க இடம் இல்லாதவர்கள், யாசகர்கள், உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். அந்த மையங்களில் பயிற்றுவிக்கப்பட்டப் போதியப் பணியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுதவிர தொழில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்தனியே மையங்களை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் மறுவாழ்வு மையங்களை போதிய வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும்.

வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிவதற்காக மாவட்டந்தோறும் குழுக்களை உருவாக்க வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள், உதவிகள் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

மேலும், இதற்காக அரசு ஒரு கண்காணிப்பு மற்றும் ஆலோசனை குழுவை உருவாக்கி இத்திட்டத்தை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்பு குழுவையும் ஏற்படுத்தி, வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மேலும், தற்போது பிச்சை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கைவிடவும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.