மத்திய அமைச்சரவையில் இருந்து 5 பேர் நீக்கம்

மத்திய அமைச்சரவையில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 5 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: மத்திய அமைச்சரவையில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 5 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் இருந்து நிகல்சந்த், ராம் ஷங்கர் கத்தேரியா, சன்வர் லால் ஜத், மன்சுக்பாய் டி வஸ்வா, எம்.கே. குண்டாரியா ஆகியோர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான முக்கிய அமைச்சர்கள் குழு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இன்று 19 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்பு விழா முடிவடைந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com