தில்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 3 பேர் காயம்

தில்லியின் பஜன்புரா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லியின் பஜன்புரா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பஜன்புரா பகுதியில் இருச்சக்கரவாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை திடீரென அப்பகுதியில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானர். மேலும் அவ்வழியாக வந்துகொண்டிருந்த டீக்கடை ஊழியர் மற்றும் அவரது மகன் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிழக்கு தில்லி பஜன்புரா பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்ற கோணத்தில் மர்ம நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com