பி.எப். மீதான வரி - பட்ஜெட் விவாதத்தின் போது தீர்வு: ஜேட்லி

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி மீது அரசு விதிக்கவிருக்கும் வரி குறித்து பட்ஜெட் விவாதத்தின்போது தீர்வு காணப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
பி.எப். மீதான வரி - பட்ஜெட் விவாதத்தின் போது தீர்வு: ஜேட்லி
Updated on
1 min read

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி மீது அரசு விதிக்கவிருக்கும் வரி குறித்து பட்ஜெட் விவாதத்தின்போது தீர்வு காணப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறும் போது 60 சதவீத பணத்துக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று விளக்கம் அளித்த அரசு, 60 சதவீத பணத்துக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என விளக்கம் அளித்தது.

இந்நிலையில் மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாய, பி.எப். மீதான வரி குறித்து அவையில் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜேட்லி, பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com