சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் பெண் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தேசிய மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு தில்லியில் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
"எழுச்சிமிகுஇந்தியாவைக்
கட்டமைக்கும் மகளிர் மக்கள் பிரதிநிதிகள்' எனும் தலைப்பில் தில்லி விஞ்ஞான் பவனில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார். இதில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாடாளுமன்ற அவைத் தலைவர் டாக்டர் ஷிரின் ஷர்மின் சௌதுரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சென்ட்ரல் ஹாலில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிறைவுரையாற்றுகிறார்.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் முயற்சியால் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் என 300-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர விடுதி கட்டணத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது! பரிந்துரை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! இலங்கை அணி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)

யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்! அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK



