திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

மோடிக்கு ராகுல் ஃபோபியா: காங்கிரஸ் கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் ஃபோபியா நோய் (ராகுல் காந்தி மீதான பயம்) வந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் ஃபோபியா நோய் (ராகுல் காந்தி மீதான பயம்) வந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
 நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசியிருந்தார்.
 இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 நாடாளுமன்றத்தில் கீழ்த்தரமான அரசியல் பேச்சுகளை மோடி பேசியுள்ளார். ராகுல் காந்தியின் நிர்வாக ரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், அவரையும், காங்கிரஸ் கட்சியையும் மோடி வசைபாடி இருக்கிறார்.
 இதன் மூலம் நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் மோடி மீண்டும் கேலிக் கூத்தாக்கியுள்ளார். இந்திய ஜனநாயகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில், நாடாளுமன்றத்தில் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான அரசியல் விமர்சனங்களை வைத்த முதல் பிரதமர் மோடி மட்டுமே.
 நாட்டில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பியிருந்தார். ஆனால், மோடியின் வசைபாட்டுப் பேச்சில் ஓரிடத்தில் கூட அதற்கு பதில் இல்லை. அது ஒரு வெற்றுப் பேச்சாகவே அமைந்துவிட்டது. இதன் மூலம் மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பையும் அவர் தவற விட்டுவிட்டார்.
 மோடியின் பேச்சை உன்னிப்பாக கேட்கும் போது, அவருக்கு ராகுல் ஃபோபியா நோய் வந்துவிட்டதாகவே தெரிகிறது என்றார் அபிஷேக் சிங்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.