FOLLOW US

ON GOOGLE DISCOVER

பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு... ரூ. 300 தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை(ஆக. 25) வெளியிடப்படும்.

TTD

திருப்பதி - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 2:03 pm IST

திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை (ஆக. 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 நவம்பர் மாத ஒதுக்கீடு கடந்த ஆக. 18-ஆம் தேதி முதல் தொடங்கியது.

இந்த நிலையில், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, நவம்பர் மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று(ஆக. 24) மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியாகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ. 300)

நவம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை(ஆக. 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியீடு

திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பர் மாத அறை ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Summary

The Tirumala Tirupati Devasthanams has announced that the quota of Special Entry Darshan tickets for visiting Lord Venkateswara in November will be released online tomorrow (August 25) at 10 AM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.