
திருப்பதி ஏழுமலையானை பார்க்க வேண்டுமா? சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை(செப். 25) வெளியிடப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை (செப். 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 டிசம்பர் மாத ஒதுக்கீடு கடந்த செப். 18-ஆம் தேதி முதல் தொடங்கியது.
இந்த நிலையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, டிசம்பர் மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று(ஆக. 24) பிற்பகல் 3 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ. 300)
டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு நாளை(செப். 25) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியீடு
திருமலை மற்றும் திருப்பதியில் டிசம்பர் மாத அறை ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு செப். 27 காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Summary
The Tirumala Tirupati Devasthanams has announced that the quota of Special Entry Darshan tickets for the month of December, intended for devotees wishing to visit Lord Venkateswara, will be released online tomorrow (September 25) at 10 AM.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







