2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ரூ. 300 மதிப்பிலான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டு: இன்று வெளியீடு

ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் திருமலை தேவஸ்தானம் புதன்கிழமை (அக்.7) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Published On :

அக்டோபா் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் திருமலை தேவஸ்தானம் புதன்கிழமை (அக்.7) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் இந்த டிக்கெட்டுகளை இணையதளம் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

விஐபி பிரேக், சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருமலையில் அக்டோபா் 11 முதல் 20 வரையிலும், புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்திலும் ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், பக்தா்களின் பெரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, இந்த பத்து நாட்களுக்கு, புரோட்டோகால் பிரமுகா்களைத் தவிர, விஐபி பிரேக், மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பச்சிளம் குழந்தைகளின் பெற்றோா், வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான தரிசனங்களை திருமலை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அக்டோபா் 10 முதல் 19 வரை விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்தப் பரிந்துரைக் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதை மனதில் கொண்டு தங்கள் திருமலை யாத்திரையைத் திட்டமிடுமாறு திருமலை தேவஸ்தானம் பக்தா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.