இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

கடல் பகுதி கூட்டுக் கண்காணிப்பு: அமெரிக்காவின் யோசனையை நிராகரித்தது இந்தியா

ஆசிய பசிபிக் கடல் பகுதியில், பிற நாடுகளுடன் இணைந்து ரோந்து, கண்காணிப்புப் பணிகளில் இந்தியா ஈடுபடலாம் என்ற அமெரிக்காவின் யோசனையை

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆசிய பசிபிக் கடல் பகுதியில், பிற நாடுகளுடன் இணைந்து ரோந்து, கண்காணிப்புப் பணிகளில் இந்தியா ஈடுபடலாம் என்ற அமெரிக்காவின் யோசனையை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நிராகரித்துள்ளார்.
 "இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தலாம். இதன் மூலம் ஆசிய பசிபிக் கடல் பகுதியில் அந்நாடுகளுடன் இணைந்து ரோந்துப் பணியில் இந்தியா ஈடுபடலாம். இது விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படை கமாண்டர் ஹாரி ஹாரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
 இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இது தொடர்பாக கூறியதாவது:
 இப்போதைய சூழ்நிலையில் பிற நாடுகளுடன் இணைந்து கடல் பகுதி ரோந்து, கண்காணிப்புப் பணிகளில் இந்தியா ஈடுபடாது. எனினும், கூட்டு கடற்படைப் பயிற்சிகள் நடைபெறும். இது, அமெரிக்க கடற்படை கமாண்டர் கூறியுள்ள கருத்துக்கான பதில் இல்லை. இந்திய அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் தேச நலனைக் கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றன என்றார்.
 ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்க முயன்று வருகிறது. இந்த அமெரிக்க-சீன விவகாரத்தில் இருந்து விலகியிருக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்பதையே பாரிக்கர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.