திரிணமூலம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரிக்கும் என மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் தனியார் நிறுவனத்திடமிருந்து லஞ்சமாக பணம் பெறுவது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இப்பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக உறுப்பினர்கள், லஞ்சம் வாங்கிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தும் என்றார்.
இதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் (லஞ்சம் பெற்றதாக இவர் மீதும் புகார் உள்ளது) கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விசாரணை 'ஒரு தலைபட்சமான முடிவு' என்ற அவர், இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அமையும். யார் வேண்டுமானாலும் உறுப்பினர்களுக்கு எதிராக ரகசிய வீடியோ பதிவு செய்து, அதன் மூலம் விசாரணை கோரலாம் என்றார்.
எனினும், பாஜக மூத்த உறுப்பினர் அத்வானி மீது நம்பிக்கை உள்ளது என்றார் சௌகதா ராய்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் வாதத்தை ஏற்க மறுத்த மக்களவைத் தலைவர், இதுபோன்ற புகார்கள் குறித்து நெறிமுறைகள் குழு ஏற்கெனவே பல நேரங்களில் விசாரணை நடத்தியுள்ளது என்றார்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக கேள்விகள் கேட்டதாக உறுப்பினர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை விசாரித்த நெறிமுறைகள் குழு, 10 மக்களவை உறுப்பினர்களையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பணிநீக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


