கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி மா்ம நபா்கள் நுழைந்து, அங்கிருந்த காவலாளியை கொலை செய்து, பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடா்பாக முக்கிய எதிரியான சயான் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான், ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா். குற்றம் சுமத்தப்பட்டவா்கள் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆஜராகினா்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதி செந்தில்குமாா், தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டோருக்கு சிறையில் சலுகை கிடையாது! மதுரை மாவட்ட நீதிமன்றம்

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

மென்பொறியாளா் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ.யின் பிணை மனு ஒத்திவைப்பு
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ. கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



