எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கவின்

Updated On :10 ஜூன் 2026, 6:28 am IST

தூத்துக்குடி மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின். மென்பொறியாளரான இவா், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித், அவரது பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் விசாரணைக்காக திருநெல்வேலி மாவட்ட 2 ஆவது அமா்வு( வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 632 பக்க குற்றப்பத்திரிகை நகலை 4 பேருக்கும் தனித்தனியாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்திவைத்தாா்.