மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கு விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென்பொறியாளரான இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஜூலை-2025இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இவ்வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் கேடிசி நகரைச் சோ்ந்த சுா்ஜித், அவரது பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகிய 4 பேரை கைது செய்தனா். சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் அமா்வு(வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், சுா்ஜித், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோா் காணொலியில் ஆஜராகினா்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவின் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான இறுதி விசாரணை ஒத்திவைப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

மென்பொறியாளா் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ.யின் பிணை மனு ஒத்திவைப்பு
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ. கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


