ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது; ஆனால் அது ஒரு சமூக ஒழுக்கக்கேடான செயல் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
சமூகவலைதளமான சுட்டுரையில் இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபோலே வெளியிட்ட பதிவுகள் விவரம்:
ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல் கிடையாது. அது சமூக ஓழுக்கக்கேடான நடவடிக்கையாகும். அதில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டும்.
ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயல் இல்லை. அதேநேரத்தில் அது போற்றத்தக்க செயல் அல்ல. ஒரே பாலினத்தவர் திருமணம் செய்யும் முறையானது, ஓரினச் சேர்க்கையை அங்கீகரிப்பதாகும். ஆகையால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் ஹொசபோலே.
முன்னதாக, தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹொசபோலேயிடம், ஓரினச் சேர்க்கை இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவின் கீழ் குற்றமாகக் கருதலாமா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், "ஓரினச் சேர்க்கை என்பது சமூகத்தில் பிறரது வாழ்வில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, அது குற்றச் செயல் கிடையாது' என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "உடலுறவு விருப்பம் என்பது தனிப்பட்டது. அதுகுறித்து ஆர்எஸ்எஸ் ஏன் தனது கருத்தை பொது நிகழ்ச்சியில் தெரிவிக்க வேண்டும். அதுகுறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவில், ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது; அதற்கு அதிகப்பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவிலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களும், ஓரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர், மக்களவையில் இதுதொடர்பாகத் தனிநபர் மசோதாவை கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

