பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இமாச்சல் அரசு வழங்கிய பருப்புப் பாக்கெட்டில் எலி: பேரவையில் ஒப்புக் கொண்டார் அமைச்சர் 

இமாச்சலப் பிரதேச அரசின் பொது வழங்கல் துறை விநியோகித்த பருப்புப் பாக்கெட்டில் செத்த எலி இருந்ததை அம்மாநில அமைச்சர் ஜி.எஸ். பாலி ஒப்புக் கொண்டுள்ளார்.

News image
Updated On :19 மார்ச் 2016, 5:37 am

இமாச்சலப் பிரதேச அரசின் பொது வழங்கல் துறை விநியோகித்த பருப்புப் பாக்கெட்டில் செத்த எலி இருந்ததை அம்மாநில அமைச்சர் ஜி.எஸ். பாலி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அந்த பருப்பு சாப்பிட உகந்ததாக இல்லை என்றும் ஆய்வுச் சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜீவ் சைஜால் பேசுகையில், மாநில பொது வழங்கல் துறை வசம் இருந்த 500 பருப்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு பாக்கெட்டுகள் மட்டுமே மனிதன் சாப்பிட உகந்ததாக இல்லை என்று கூறப்பட்டதே தவிர, மற்ற பாக்கெட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.

எலி இருந்த பருப்பு பாக்கெட், தரம்புரில் உள்ள மொத்தக் கொள்முதல் கிடங்கில் இருந்து பிப்ரவரி 20ம் தேதி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.