நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, விவசாயிகள் மாற்று விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தில்லியில் நடைபெறும் `கிருஷி உன்னாடி மேளா' எனும் விவசாய முன்னேற்றத்துக்கான மூன்று நாள் விழாவை இன்று தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
அரசின் சமீபத்திய தரவுகளின்படி, விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ரூ. 6,426 மட்டுமே. இதை வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்துவதற்கு மத்திய அரசு, புதிய விவசாயக் காப்பீடு திட்டம், மண்வள பரிசோதனை அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் வசதியை பெறும் வகையில் நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் 90 நீர்பாசனத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும். இதற்காக அரசு ரூ. 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட 90 நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவை அனைத்திலும் அணைகள் போல் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆனால், தற்போது விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் கூட வழங்க இயலாத நிலையே உள்ளது.
கடந்த ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. ஆனால், வேலை ஏதும் நடைபெறவில்லை. பாஜக அரசு இத்திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் கோடைகாலத்தில் நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கண்டிப்பாக ஒரு வேலை நடத்தப்படும். இதன்படி நாடு முழுவதும் 5 லட்சம் குளங்களைச் சீரமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தண்ணீர் பாதுகாப்பில் முதன்மையானது தண்ணீரை சேமிப்பது. தண்ணீரை வீணாக்குவதற்கு நமக்கு உரிமையில்லை.
விவசாயிகள் தங்களுடைய வழக்கமான விவசாயப் பணிகளுடன், கால்நடை வளரப்பு மற்றும் மரம் வளர்ப்பு பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
மேலும், நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, விவசாயிகள் மாற்று விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


