பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புல்லாங்குழல் கலைஞர் ஏவி பிரகாஷ் மரணம்: கோயிலில் இசை நிகழ்ச்சியின் போதே உயிர் பிரிந்தது

புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞரும், இசை மேதை என். ரமணியின் சீடருமான ஏ.வி. பிரகாஷ் (74) நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Updated On :19 மார்ச் 2016, 5:51 am

புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞரும், இசை மேதை என். ரமணியின் சீடருமான ஏ.வி. பிரகாஷ் (74) நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Story image

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை கலைஞர் நரசிம்ம மூர்த்தியுடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவர் மாரடைப்பால் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும், சக கலைஞர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சியை தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மேடையிலேயே, தொடர்ந்து இசைக் கருவிகள் ஒலிக்க, ஏ.வி. பிரகாஷின் உயிர் இசையோடுக் கலந்தது.

இவர் இசை மேதை ரமணியின் சீடர் என்பதோடு, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொடுத்து மிகப்பெரிய இசை சேவையை ஆற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைக்காக பிரகாஷ் ஆற்றிய சிறப்பான பணியை கௌரவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் ஏராளமான விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.