பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒடிசாவில் காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொலை

ஒடிசாவில், கேந்திரபாரா மாவட்டத்தில் ஒடிசா துணை காவல் படையைச் சேர்ந்த காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :29 மார்ச் 2016, 12:13 pm

கேந்தரபாரா : ஒடிசாவில், கேந்திரபாரா மாவட்டத்தில் ஒடிசா துணை காவல் படையைச் சேர்ந்த காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டமால் மாவட்டத்தில் உள்ள கெண்டுசயி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர கண்ஹாரா (வயது 26). இவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். துப்பாக்கியின் குண்டு தலையின் நெற்றியை துளைத்ததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்ப தகராறு மற்றும் பணிச்சுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மறான மரணம் என்பதால் வழக்குப் பதிவு செய்து, இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.