கொல்கத்தா: நடைபெறவிருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஏ.பி.பி நியூஸ்' செய்தி தொலைக்காட்சியும் 'நீல்சன்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த முறையைவிட அதிக அளவிலான இடங்களை மம்தா கைப்பற்றுவார் என தெரியவந்துள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிக்கட்டத் தேர்தல் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கைக்கோர்த்துள்ளன. தேர்தல் கூட்டணி ஏதும் இல்லாத நிலையில், இரு கட்சிகளும் அறிவிக்கபடாத தொகுதி உடன்பாட்டை செய்துள்ளனர். அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் இடதுசாரிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அதுபோல, இடதுசாரிகளுக்கு செல்வாக்கான இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இதுதவிர, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.
இந்நிலையில் ஏபிபி நியூஸ் - நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. அதில் மம்தா பானர்ஜி, கடந்த முறையைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 118 பேரவைத் தொகுதிகளில் உள்ள 14,450 பேர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெற்று 110க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 39 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தது.
காங்கிரஸ்-இடதுசாரி முன்னணி 44 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைப் பெறாது என கூறப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நன்றாக இருப்பாத 58 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ள நிலையில், 16 சதவீதம் பேர் மட்டுமே மோசம் என கூறியுள்ளனர்.
மக்களால் விரும்பப்படும் தலைவர்களில் மம்தா பானர்ஜி முதலிடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாசாரியா இரண்டாம் இடத்திலும், பிரதமர் மோடி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா ஆட்சி நன்றாக இருப்பதாக 29 சதவீதம் பேரும், சராசரியாக இருப்பதாக 42 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 23 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


