

புது தில்லி: இந்திய வங்கிகளிடம் தான் பெற்றுள்ள கடனில், ரூ.4 ஆயிரம் கோடியை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பி செலுத்திவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.
இந்திய வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல், இந்தியாவை விட்டு வெளியேறினார் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா.
இது குறித்து வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, விஜய் மல்லையாவின் வழக்குரைஞர் வைத்தியநாதன், நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், வங்கிகளிடம் பெற்றுள்ள கடனில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 4 ஆயிரம் கோடியை திரும்ப செலுத்துவதாக விஜய் மல்லையா உறுதி அளித்துள்ளார்.
மேலும், ஜி.இ. நிறுவனத்துக்கு எதிராக தான் தொடர்ந்துள்ள வழக்கில் வெற்றி பெற்றால் மேலும் ரூ.2 ஆயிரம் கோடியையும் செப்டம்பருக்குள் செலுத்தத் தயார் என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கைக் குறித்து வங்கிகளின் தொழில் கூட்டமைப்பு இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.