பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோரை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறை: உச்ச நீதிமன்றம் அனுமதி

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2016, 6:29 am

புது தில்லி : சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கியர்வளுக்கு உதவும் நபர்கள், காவல்துறையினராலோ அல்லது பிற துறை அதிகாரிகளாலோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி. கோபாலா கௌடா, அருண் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு அனுமதி வழங்கியதோடு, இது குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உரிய நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களை பாதுகாக்க நல்லெண்ணத்தோடு உதவும் நபர்கள், பிறகு வழக்கு விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தடுக்கும் என்றும், இதனால், விபத்தில் பல உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.