

திக்போய்: கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசும் நிலையில், விஜய் மல்லையாவும் லலித் மோடியும் வெளிநாட்டில் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஸ்ஸாமில் இன்று திக்போய் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல், வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்து, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகக் கூறினார்.
ஆனால், விஜய் மல்லையாவும், லலித் மோடியும் இன்னமும் வெளிநாட்டில் இருப்பது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
ஒரு பக்கம் கருப்புப் பணம் பற்றி பேசும் மோடி, மற்றொரு பக்கம் மல்லையாவை நாட்டை விட்டு தப்பிக்க வைத்துவிட்டார். இந்தியாவை விட்டு புறப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு மல்லையா, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் எது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்று நான் கேட்கிறேன் என்று ராகுல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.