

லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவ் மேற்கொள்ளும் பிரசார யாத்திரையை முலாயம் சிங் யாதவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த யாத்திரைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்தில் அகிலேஷ் பயணிக்க, அவரது தொண்டர்கள் வழி நெடுகிலும் காத்திருந்தனர்.
இன்று 100 கி.மீ. தூரம் பிரசார யாத்திரை மேற்கொண்டு 5 மாவட்ட மக்களை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இந்த யாத்திரையை முன்னிட்டு 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக பிரசார யாத்திரை தொடங்கி ஒரு கி.மீ. தொலைவிலேயே, சொகுசு பேருந்தில் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், அகிலேஷ் யாதவின் பிரசார யாத்திரை முதல் நாளிலேயே முடங்கிப் போனது.
அதோடு, பிரசார யாத்திரை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, கட்சித் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியதில் கடும் மோதல் வெடித்தது. ஒரே கட்சித் தொண்டர்கள் இவ்வாறு மோதிக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.