பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 'சோதனை' சம்பவம் ஆனது

புது தில்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை சோதனை ஓட்டம் நடத்திய போது, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:52 am

DIN


புது தில்லி: புது தில்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை சோதனை ஓட்டம் நடத்திய போது, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ஜானகிபுரி - பொடானிகல் கார்டர் பகுதிகளுக்கு இடையே கலன்டி கஞ்ச் ரயில் நிலையத்துக்கு அருகே ஒரே டிராக்கில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

புதிதாக அமைக்கப்பட்டு வந்த ரயில் பாதையில், வெள்ளிக்கிழமை அன்று ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்கி சோதனை நடத்திய போது இந்த சம்பவம் நடந்தது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் யாரும் இல்லாததால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த வழித் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை 2017ம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.