கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வெடித்து சிதறிய 'லைஃ'ப்' ஸ்மார்ட்போன் பேட்டரி: குழப்பத்தில் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸின்  'லைஃ'ப்' ஸ்மார்ட்போன் ஒன்றின் பேட்டரி  ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:53 am

DIN

புதுதில்லி: ரிலையன்ஸின்  'லைஃ'ப்' ஸ்மார்ட்போன் ஒன்றின் பேட்டரி  ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரான உமர் அப்துல்லாவின் அரசியல் செயலாளராக இருப்பவர் தன்வீர் சாதிக். இவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெடித்து சிதறிய நிலையில் உள்ள பேட்டரி ஒன்றின் படத்தை, ரிலையன்ஸ் லைஃ ப் வகை ஸ்மார்ட்போன் ஒன்றின் படத்துடன் இன்று வெளியிட்டிருந்தார்.

அத்துடன் 'ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய விபத்தில் என் குடும்பம் அதிர்ஷ்டவசமாக  உயிர் பிழைத்தது' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த தகவலை டிவிட்டரில் இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் லைப்  ஸ்மார்ட்ன்போன்  நிறுவன டிவிட்டர் பக்கங்களுக்கும் தெரிவித்திருந்தார்.

சாதிக் அது என்ன மாடல் போன் என்பதையும், வெடித்து சிதறியதற்கான காரணத்தையும்  தெரிவிக்கவில்லை. ஆனால் உடனடியாக பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம், 'இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும்  விரைவில் சாதிக்கை தொடர்பு கொள்வதாகவும்' தெரிவித்திருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.